ஜப்பானில் குறைந்து வரும் பிறப்பு சதவிகிதம்!

ஜப்பானில் இதுவரையில் இல்லாத அளவிற்கு பிறப்பு சதவிகிதம் வெகுவாக குறைந்து வருவதாக தெரியவந்துள்ளது.

01கடந்த 1899 ஆம் ஆண்டு அந்நாட்டில் முதன்முதலாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது அங்கு ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் குழந்தைகள் பிறந்தன. பின்னர் நாளடைவில் படிப்படியாக அங்கு பிறப்பு விகிதம் குறைந்துகொண்டே வந்துள்ளது.

சுறுசுறுப்புக்கு பெயர்போன ஜப்பானியர்களில் 27.2 சதவிகித மக்கள் 65 வயதை கடந்த முதியவர்களாக உள்ளனர். அதேவேளையில் 14 வயதுக்கு குறைவானவர்களின் எண்ணிக்கை 12.7 சதவிகிதமாக உள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் வரலாறு காணாத அளவில் பிறப்பு விகிதம் 4 சதவிகிதம் குறைந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு 13 லட்சத்து 40 ஆயிரமாக இருந்த இறப்பு எண்ணிக்கை இந்த ஆண்டு மேலும் 3 சதவிகிதம் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.