அச்சத்தினால் தற்கொலை செய்து கொண்ட மாணவன்!

1456286083-7454கணித பாடம் தொடர்பிலான அச்சத்தினால் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

தெஹியத்தகண்டிய அரலகங்கவில கெக்குலுவெல பிரதேசத்தில் இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய குறித்த மாணவன், கணித பாடத்திற்கு உரிய முறையில் பதிலளிக்கத் தவறியதாக மன வேதனைக் கொண்டு நஞ்சருந்தி உயிரை மாய்த்துக்கொண்டுள்ளான்.

17 வயதான இசார ஜனித் சந்திரசிறி என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

கணித பாட பரீட்சைக்குத் தோற்றி வீடு திரும்பிய மாணவன், தாம் சரியாக பதிலளிக்கத் தவறியதாக மன வேதனைக் கொண்டு நேற்று முன்தினம் நஞ்சு அருந்தியுள்ளார்.

உடனடியாக உறவினர்கள் நஞ்சு அருந்திய மாணவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

கல்வி நடவடிக்கைகளில் அதி சிறந்த விளங்கும் இந்த மாணவன் தவணைப் பரீட்சைகளில் வகுப்பில் முதல் நிலையை எல்லா சந்தர்ப்பங்களிலும் பெற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.