கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தருமான ஜவாத் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்துடன் தொடர்ந்தும் தன்னால் செயற்பட முடியாது என்ற காரணத்திற்காகவே தான் கட்சியிலிருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் பலர் ஜவாத்துடன் இணைந்து கல்முனை மாநகர சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.
இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பாத்ததும்பர பிரதேச சபைக்கு சுயாதீன குழுவில் போட்டியிடவிருந்த பிரபல தொழிலதிபர் அல்ஹாஜ் ஹனீப், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டுள்ளார். இவர் பாத்ததும்பர பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடவுள்ளார்.







