இவர் யாரென்று தெரிகிறதா..?

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு புகைப்படம் அரசியல் விமர்சகர்களை பார்த்த கணமே ஒரு நிமிடம் அதிர்ச்சியடைய வைக்கும் அளவிற்கு ஒரு பிரபலத்தின் முகத்தோற்றதுடன் ஒத்துப்போகும் அளவிற்கு தத்ரூபமாக உள்ளது.

அந்த அரசியல் பிரபலம் கால ஓட்டத்திற்கு தகுந்தாற்போல தனது கட்சி ஓட்டத்தையும் மாற்றி கொள்வார்.

மறுமலர்ச்சியில் திராவிடமாகி, அண்ணா திராவிடம், திராவிட முன்னேற்றத்தில் வேர் பார்த்து, மக்கள் நலனில் மதிகெட்டு இப்போது மீண்டும் உதைய சூரியானாய் எழுந்து வந்திருக்கிறார்.

ஆம் அவர்தான்.! வை. கோபாலசாமி என்கின்ற வைகோ. தற்போது அனைத்து கட்சியிலும் கூட்டணி வைத்த அனுபவத்தை கொண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

திராவிட இயக்கத்தின் எதிர்கால நலன் கருதி ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு தருவது என மதிமுக தீர்மானித்துள்ளதாக வைகோ கூறி இருந்தார்.

மக்கள் நல கூட்டணியில் இருந்த பொழுது திமுகவை எதிர்த்தவர் இப்போது அங்கு உறவாடி கொண்டிருக்கிறார்.

நாளுக்கு நாள் கட்சி மாறி மாறி ஆதரவு தெரிவிப்பதால் வலைதளங்களில் அதிகமாக விமர்சிக்கப்படும் அரசியல் தலைவர்கள் பட்டியலில் வைகோவிற்கு என்று தனி இடம் உண்டு.

இந்த நிலையில் சமீபத்தில் வலைத்தளத்தில் வைகோ இராணுவ வீரராய் இருப்பது போல உலாவி கொண்டிருக்கும் ஒரு புகைப்படம் அரசியல் வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

அந்த புகைப்படத்தில் வைகோ அச்சு அசலாக இராணுவ வீரர் தோற்றத்தில் இருப்பதை போல உள்ளது. பார்த்த கணத்தில் வைகோ தான் என்று நினைத்து பலரும் அதிர்ச்சிக்குள்ளாகி வருகின்றனர்.

ஆனால் அது ஈராக் இராணுவத்தை சேர்ந்தவரின் புகைப்படம் என்று கூறப்படுகிறது.