அப்பா, மகனுக்கு போதை அடிமை சிகிச்சை ஏற்பாடு!

Tamil_News_large_159346520160826031529ஷூட்டிங் லேட் பஞ்சாயத்தால் பேரை கெடுத்துக்கொண்ட மகனுக்கு அப்பா போதை அடிமை சிகிச்சை தர ஏற்பாடு செய்திருக்கிறாராம்.

அந்த வாரிசு நடிகர் லேட் பிரச்னை சர்ச்சைகளில் அடிக்கடி சிக்குகிறவர். சமீபத்தில் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர் இதை பப்ளிக்காக சொல்லி கெட்ட பெயரை ஏற்படுத்தி விட்டார். நடிகர் மந்தமாக வேறு மாறி விட்டார். 60 வயதுக்கு மேல் வரவேண்டிய தளர்ச்சி நடிகருக்கு 30 வயதுகளிலேயே வந்துவிட்டது. எல்லாம் போதைதான் காரணமாம்.

இது தொடர்ந்தால் மகனின் உயிருக்கே ஆபத்து என்று போதை அடிமை சிகிச்சை எடுக்க சொல்லி மகனுக்கு ஒரு டாக்டரை அப்பாய்ண்ட் செய்துவிட்டாராம்.

யார் பேச்சையும் கேட்காத மகன் டாக்டர் பேச்சை மட்டும் கேட்டு விடுவாரா என்ன? ‘ஒரு மாதிரி’யாக சிகிச்சை போய்க்கொண்டிருக்கிறதாம்.