கொழும்பில் நண்டுச் சாப்பாடு! மலேசிய பிரதமர்!

இலங்கைக்கு மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள மலேசியப் பிரதமர் மொஹட் நஜீப் துன் ரஸாக், தமது தூதுக்குழுவினருடன் இராப்போசனம் மேற்கொண்டுள்ளார்.

இராப்போசனம் இன்றைய தினம்(17) இடம்பெற்றுள்ளதுடன், இது குறித்து அவர் ‘‘கொழும்பில் நண்டு சாப்பாடு‘‘ என்று மலாய் மொழியில் டுவிட்டரில் கூறியுள்ளார்.

இதேவேளை, இது தொடர்பான புகைப்படம் ஒன்றையும் மலேசியப் பிரதமர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில், மலேசிய பிரதமருடன், அமைச்சர் கயந்த கருணாதிலக்கவும் பங்கேற்றுள்ளார்.