செயற்திட்டத்தை ஒழுங்காக முடிக்காத மாணவி!! அதிபர் அதிபரின் மிரட்டல்!! மாணவியின் நிலை தெரியுமா?

பாடசாலை அதிபரின் மிரட்டலால் 500 தோப்புக்கரணம் போட முயன்ற பள்ளி மாணவி, மயங்கி சரிந்தார். தண்டனை கொடுத்த அதிபர் கைதாகி விடுதலை செய்யப்பட்டார்.மகாராஷ்ட்ரா மாநிலம் கோலப்பூர் மாவட்டத்தில் உள்ளது கனூர் கிராமம். இங்கே பாவேசுரி சந்தேஷ் வித்யாலயா என்ற பள்ளி உள்ளது. இங்கு பியூனாக வேலைபார்ப்பவர் ரமேஷ் சவுகாலே. இவர் மகள் விஜயா. வயது 13. இந்தப் பள்ளியில் 8 -ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மாதம் 24-ம் திகதி விஜயா, புராஜக்ட் ஒன்றை பள்ளியில் சமர்பிக்க வேண்டும். அன்று வகுப்பு ஆசிரியர் வரவில்லை. இதையடுத்து பள்ளியின் பிரின்சிபல் அஸ்வினி தேவன் வந்துள்ளார். மாணவிகளின் அசைன்மென்டை ஆய்வு செய்துள்ளார். அப்போது விஜயா உட்பட 6 மாணவிகள் அதைச் செய்யவில்லை என தெரிய வந்தது.கோபம் அடைந்த அதிபர், அவர்களை 500 தோப்புக்கரணம் போட வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் பேச்சை மீறக் கூடாது என்பதால், எல்லோரும் அதைப் பின் பற்றினர். சில மாணவிகள் ஐம்பதோடு முடித்துக்கொண்டு அழுதனர். மற்றவர்கள் போராடி நூறு தோப்புக்கரணம் போட்டுவிட்டு முடியாமல் தவித்தனர். ஆனால் விஜயா, பயத்தில் 300 தோப்புக்கரணம் போட்டிருக்கிறார். பிறகு மயங்கி விழுந்துவிட்டார்.இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு வாரத்துக்குப் பிறகு இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்தனர். போலீசார் பெயருக்கு வழக்குப் பதிவு செய்து அதிபரைக்கைது செய்த அடுத்த சில மணி நேரங்களிலேயே விட்டுவிட்டனர்.ஒரு வாரம் சிகிச்சை அளித்தும் விஜயாவுக்கு கால்கள் இயங்கவில்லை. அவரால் நடக்க முடியவில்லை. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் இப்போது சீரியசாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. சம்பவம் குறித்து பாடசாலை அதிபர் கூறும்போது, ‘புராஜக்ட் சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள் அது. சமர்பிக்கவில்லை என்பதால் தோப்புக்கரணம் போட வைத்தேன். 500 தோப்புக்கரணம் போட வேண்டும் என்று நான் சொல்லவே இல்லை’ என்றார்.இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் குறித்த மாணவியின் நிலைக்கு காரணமான அதிபருக்கு எதிராக விசாரணைகள் ஏதும் நடத்தப்படுகின்றதா என்பது குறித்த தகவல்க்ள எதுவும் இல்லை.