அம்பாறையில் வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
19 வயதுடை ஜீவனி லக்ஷிக்கா என்ற யுவதியே இவ்வாறு சடலமாக நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த யுவதி இரு மாத கர்ப்பிணி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தினத்தில் யுவதியின் கணவர் உந்துருளியில் ஏறி சென்றதாக அயல் வீட்டு சிறுவன் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த நபர் கழுத்தில் சுறுக்கிட்டு தற்கொலை செய்துள்ள முயற்சித்துள்ளார் எனவும், அவரின் சகோதரன் கண்காணித்ததை தொடர்ந்து அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த யுவதி உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







