கனடாவில் யாழ்ப்பாண இளைஞன் தற்கொலை!

கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் தற்கொலை செய்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Capturev-vயாழ். வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த 23 வயதான பாலமுரளி கிருஷ்ணா என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிர் பறிக்கும் விளையாட்டான புளுவேல் விளையாடிய நிலையில், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக காணப்பட்டதாகவும் அதிலிருந்து விடுபட மருத்துவ உதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவ ஆலோசனையின்படி அதிலிருந்து விடுபட அவரது சிந்தனையை வேறு வழியில் திசைதிருப்ப வைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 12ம் திகதி துப்பாக்கி சூட்டு விளையாட்டுக்கு சென்ற வேளையில், தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கனடாவின் ரொறண்டோவில் வசித்து வரும் பாலமுரளி, Brock பல்கலைக்கழக மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய ரீதியில் தடைசெய்யப்பட்டுள்ள புளுவேல் விளையாட்டு காரணமாக பலர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இவ் விளையாட்டு அப்ஸ் ஐ தடைசெய்யமுடியாமல் உள்ளதாக சர்வதேச ரீதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.