ராகுல்காந்திக்கு வாழ்த்து தெரிவித்த உலகநாயகன்…

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள ராகுல்காந்திக்கு நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று காலை டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலையகத்தில் நடைபெற்ற விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ராகுல்காந்தி பதவியேற்றார்.

Kamal Hassan (8)-compressed (1)இதையடுத்து ராகுல்காந்திக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தின் படிபிடிப்பில் உள்ள நடிகர் கமல்ஹாசன் ராகுல்காந்திக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டர் செய்தியில் காங்கிரஸ் கட்சி தலைவர் என்ற பதவிக்கு உங்களால் புதிய அர்த்தம் கிடைக்க பெறட்டும் என தெரிவித்து இருக்கிறார். காங்கிரஸ் கட்சி தலைவராகவும், கட்சி நிர்வாகத்தையும் நீங்கள் திறம்பட நடத்துவீர்கள் என நம்புவதாவும் நடிகர் கமல்ஹாசன் தனது பதிவியில் குறிப்பிட்டுள்ளார்.

5a34ca0638dc4-IBCTAMIL