பல வருடங்களாக சத்தமின்றி சாதம் வழங்கும் நம்மவர்

சிட்னியிலுள்ள Parramatta Alfred Park இல் ஒவ்வொரு திங்கள் இரவும், வசதி குறைந்தோருக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகிறது. எந்தவித விளம்பரங்களோ அன்றி பதாதைகளோ இன்றி வழங்கப்படுகின்ற உணவினைப் பெறுவதற்குப் பலர் வரிசையில் காத்து நிற்கின்றனர்.

உணவு வழங்குபவர்களில் தமிழ் மொழி பேசும் திருமதி கமலா மற்றும் திரு நட்ராஜ் ஆகியோருடன் பேச முற்பட்டபோது, வானொலியில் பேச முதலில் மறுத்தாலும் பின்னர் எமது அன்பான வேண்டுகோளுக்கு இணங்க உரையாடினார்கள். அவர்களுடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

Capturegdf