விளையாட்டாக தூக்கு போட்ட யுவுதி, உயிரிழப்பு – யாழில் சம்பவம்!

201710271534499543_young-girl-suicide-in-muthupet_SECVPF

நுளம்புவலையினை போட்டுபடுக்க சொல்லி தாய் கண்டித்ததினால் விளையாட்டாக தூக்கு போட்டது, விபரீதமான நிலையில் பாடசாலை மாணவியான யுவதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஆனைக்கோட்டையில் சம்பவித்துள்ளது.

சோமசுந்தரம் வீதி ஆனைக்கோட்டை பகுதியினை சேர்ந்த  சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி பயலும் 18  வயது மாணவியே இவ்வாறு உயிரிழந்தவர்.

தாயின் வாக்குமூலத்தின் பிரகாரம்….

வீட்டில் நுளம்பு பெருக்கம் அதிகம் உள்ளது. இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை(10) இரவு மகள் படுக்க செல்ல முன்னர் நுளம்பு வலையினை போட்டு தூங்குமாறு கூறி கண்டித்தனான். மகள் கதவு பூட்டிவிட்டு தூங்குவது வழமை. இரவு தம்பியும், தங்கையும் அக்கா எங்கே என கேட்டு கதவினை திறக்க முற்பட்ட போது உள்ளே தூக்கு போட்ட நிலையில் காணப்பட்டுள்ளார் என இறப்பு விசாரணையின் போது கூறியுள்ளார்.

உடனடியாக தூக்கில் இருந்து கழற்றி அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்து சென்று அனுமதித்த போதும் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.இறப்பு விசாரணையினை என்.பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.