சமந்தா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கலக்கி வரும் ஹீரோயின். இவர் சமீபத்தில் தான் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்துக்கொண்டார்.
இந்நிலையில் திருமணத்திற்கு பிறகும் இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்றார், அதில் ராம்சரணுக்கு ஜோடியாக ஒரு கிராமத்து படம் ஒன்றில் நடித்து வருகின்றார்.
இதில் சமந்தா மாடு மேய்க்கும்படியும், வீட்டு வேலை செய்வது போலவும் ஒரு சில புகைப்படங்கள் வந்துள்ளது, இதுவரை அழகாக வெறும் பாடலுக்கு மட்டும் ஆடிச்செல்லும் சமந்தாவை இப்படி பார்த்தவுடன் ரசிகர்களுக்கே ஷாக் தான்.








