யாழில் பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!!

யாழ்ப்பாணத்தில் சினிமா பாணியில் பிறந்த நாள் கொண்டாடிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ca04868d04a42b471df14ce559939851_1512994845-sவீதியை மறித்து மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கேக் வெட்ட முயற்சித்த இளைஞர்கள் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீதியை மறைக்கும் வகையில் மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்தி அதன் மேல் கேக் ஒன்றை வைத்து கூர்மையான ஆயுதத்தில் அதனை வெட்டுவதற்கு குறித்த இளைஞர்கள் முயற்சித்துள்ளனர்.

அதற்கமைய கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆவா குழுவுடன் தொடர்புடையவர்களா என விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். கொக்குவில் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டவர்கள் 17 முதல் 18 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளார்.