சாவகச்சேரியில் திகதி காலாவதியான கோல்டன் கவ் பிஸ்கட் விற்பனைக்கு வைத்திருந்த கைதடிப் பிரதேச வர்த்தகருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் 3 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபை அலுவலர்களால் கடந்த செப்டம்பர் மாதம் நடாத்தப்பட்ட திடீர்ப் பரிசோதனையின் போது இந்த வர்த்தக நிலையத்தில் திகதி காலாவதியான கோல்டன் கவ் பிஸ்கட் விற்பனைக்கு வைத்திருந்தமை கண்டு பிடிக்கப்பட்டு வர்த்தகர் மீது சாவகச்சேரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது வர்த்தகர் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து நீதிமன்ற பதில் நீதிவான் செ.கணபதிப்பிள்ளை 3 ஆயிரம் ரூபா தண்டம் விதித்தார்.






