மைத்திரியின் மகளுக்கு ஏற்பட்ட ஆசை!

இலங்கையில் பாரிய மாற்றம் ஒன்றை தனது தந்தையான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்படுத்தியுள்ளதாக, அவரின் மகள் சத்துரிக்கா சிறிசேன தெரிவித்துள்ளார்.

சத்துரிக்கா சிறிசேனவினால் எழுதப்பட்ட “ஜனாதிபதி தந்தை” என்ற புத்தகத்தை பொலநறுவை மக்கள் மத்தியில் வெளியிடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் உரையாற்றிய சத்துரிக்கா சிறிசேன,

தனது தந்தை இலங்கை சமூகத்தில் புதிய மாற்றம் ஒன்றை அறிமுகம் செய்த விசேட தலைவர் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்களின் சிரேஷ்ட தலைவராக எனது தந்தை இருக்க வேண்டும் என வேண்டிக் கொள்கின்றேன் என சத்துரிக்கா மேலும் தெரிவித்துள்ளார்

santhurani_maithiri_004