இலங்கை மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் வகையில் கருப்பு மழை நேற்று பெய்துள்ளது.
இந்த சம்பவம் நேற்றைய தினம்(09) சியம்பலாண்டுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மழையில் ஏற்பட்ட மாற்றம் தொடர்பில் அவதானித்த மக்கள் அனர்த்த முகாமைத்துவ பிரிவிற்கு தகவல் வழங்கியுள்ளனர்.
குறித்த மழையின் மாதிரிகளை பெற்றுக்கொண்ட அனர்த்தமுகாமைத்துவ மத்திய நிலையம் இது தொடர்பான ஆய்வினை மேற்கொள்வதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.






