உள்ளூராட்ச்சி மன்ற தேர்தல்களில் தமிழ்தேசிய கூட்டமைபின் பங்காளி கட்சிகளுக்கிடையிலான முறுகல் நிலை குறித்து இன்று 07.12.2017 சுமத்திரன் அவர்கள் பேசிய போது இம் முறுகல் நிலையானது சுமுகமாக தீர்க்கப்படும் என அவர் தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில் இம் முறுகல் நிலைக்கு காரணம் ஆசன பங்கீடு சம்மந்தமாக ஒரே கொள்கையில் அனைவரும் பயணிக்கவேண்டும் ஆனால் இதை விடுத்து பிளவு என்ற சிந்தனையே இவ்வாறான முறுகல் நிலையை தோற்றுவிக்கின்றது.
இது தொடர்பில் சம்மந்தன் அவர்கள் தெளிவான அறிவுரைகளை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் .
மேலும் விட்டுக்கொடுங்கள் இப்படி விட்டுக்கொடுத்தால் ஆசனப்பதிவால் தமிழ்தேசிய கூட்டமைபில் பிளவு வராது.
இது தொடர்பில் யாழில் நடைபெற்ற அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தது . மீண்டும் ஓர் முயற்ச்சியில் நாம் இணைத்துள்ளோம் இன்று அல்லது நாளை இதற்கான தீர்ப்பு அல்லது முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார் .






