அதிகாலையில் திருச்சி அருகே நிகழ்ந்த கோரம்..?

இன்று அதிகாலையில் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே நின்று கொண்டிருந்த போர்வெல் லாரி மீது வேன் மோதியதில்10 பேர் பரிதாபமாக உயிரிழந்த துயர விபத்து நடந்துள்ளது.

திருப்பதி செல்வதற்காக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து 15 பேர் கொண்ட குழுவினர் டெம்போ டிராவலர் வேன் மூலம் பயணித்து கொண்டிருந்தனர்.

large_201712070648036177accident--3333வேன் திருச்சியை மாவட்டம் துவரங்குறிச்சி அருகே வந்த போது, அந்தப்பகுதியில் ரோட்டில் நின்று கொண்டிருந்த போர்வெல் லாரி மீது வேன் வேகமாக மோதியது.

இந்த கோர விபத்தில் சிக்கி 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதில் 2 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விபத்தில் படுகாயமடைந்த 5 பேர் திருச்சி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த, மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கல்யாண் ஆகியோர் மீட்பு பணிகளை துரிதப்படுத்தி உள்ளனர்.

விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். கோர விபத்தில் வேன் உருகுலைந்து போனது.

சிக்கிக்கொண்டவர்களின் உடலை மீட்க தீயணைப்புத்துறையினர் ஒன்றரை மணி நேரம் போராடினர்.