சென்னையில் தூங்கிகொண்டிருந்த மனைவி மீது கணவன் தீவைத்து எரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜேஷ் குமார்- சந்தியா தம்பதியினருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். போதைக்கு அடிமையான ராஜேஷ் முறையாக வேலைக்கு செல்லாமல் சுற்றி திரிந்ததால், சந்தியாவுக்கும் இவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் வழக்கம்போல் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது, இதில் ராஜேஷ், சந்தியாவை கடுமையாக தாக்கியுள்ளார்.
மேலும் கடும் கோபத்தில் இருந்த ராஜேஷ், வீட்டில் தூங்கி கொண்டிருந்த சந்தியா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் உடல் முழுவதும் கருகிய நிலையில், சந்தியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதில், மனைவி மீது தீவைத்து எரித்தபோது ராஜேஷ் மீது தீப்பற்றியுள்ளது, இதனால் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.