சசிகலாவுக்கு எதிரான மனு தள்ளுபடி!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் சசிகலா மீது சந்தேகம் எழுவதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் சரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

27-1485516756-sasikala--11220-600_17175_15308மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது, முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட யாரையும் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்காததால், சசிகலாவே, ஜெயலலிதாவின் மரணத்திற்கு பொறுப்பு என்றும் வழக்கறிஞர் சரவணன் தனது மனுவில் குறிப்பிட்டார்.

மேலும், சசிகலா முதல்வரின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகவும் சரவணன் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறிய உயர்நீதிமன்றம், வழக்கறிஞர் சரவணனுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்திருப்பதாக கூறியது.

இதையடுத்து, மனு திரும்பப் பெறுவதாக வழக்கறிஞர் சரவணன் நீதிமன்றத்தில் தெரிவித்ததால், சசிகலாவுக்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.