ரயில்வே போலீஸ் தற்கொலை; இன்ஸ்பெக்டர் மீது வழக்கு

விழுப்புரத்தில் ரயில்வே போலீஸ் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

IMG-20171201-WA0293_19598 (1)

சைபர் க்ரைம் ஜூனியர்: “ஸாரி… அதிகமா அனுப்பிட்டேன்!”
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த ஆண்டிக்குழி என்ற கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். அவருடைய மகன் சபரிநாதன், வயது 31. விழுப்புரம் ஆயுதப்படைப் பிரிவில் பணியில் இருந்த இவர் தற்போது விருத்தாசலம் ரயில்வே போலீசில் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி கலா என்ற 24 வயது மனைவி இருக்கிறார். தற்போது ஆறுமாதம் கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில், சபரிநாதன் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து திருநாவலூர் காவல்நிலையத்தில் சபரிநாதன் தந்தை கோவிந்தன் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகிறார்கள். இன்ஸ்பெக்டர் பணியில் கொடுத்த அழுத்தம் காரணமாக கோவிந்தன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது உடல்நிலை சரியில்லாததால் தற்கொலை செய்து கொண்டாரா என்று போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.