64வது படத்திற்காக அஜித் வாங்கப்போகும் சம்பளம் மட்டும் எவ்வளவு தெரியுமா?

கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி.

கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி வெளியான இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.

கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்டு உருவான இப்படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடினார்கள், படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ஹிட் தான்.

குட் பேட் அக்லி திரைப்படம் அஜித் ரசிகர்களுக்கான கதை என்பதை தாண்டி அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடினார்கள். இந்த வருடம் வெளியான படங்களில் செம வசூல் வேட்டை நடத்திய படமாக குட் பேட் அக்லி அமைந்துள்ளது.

கார் ரேஸில் முழு கவனத்தை செலுத்திவரும் அஜித் போட்டிபோடும் இடம் எல்லாம் வெற்றிப்பெற்று வருகிறார். இந்த நிலையில் அஜித்தின் 64வது படம் குறித்த தகவல் வலம் வருகிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கப்போகும் 64வது படத்திற்காக அவர் ரூ. 200 கோடி சம்பளம் வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த சம்பள விவரம் குறித்து சரியான தகவல் எதுவும் இல்லை.