கேரள மக்களின் அபிமான நடிகர் மரணம்!

கலைஞனுக்கு முக அழகு கூட பெரிதல்ல. ஆனால் குரல் அவர்களை தனித்துவமாய் காட்டும். குரலுக்கும் மனதிற்கும் அப்படி ஒரு நெருக்கம் இருப்பதை யாராலும் பிரிக்க முடியாது.

இப்படி ஒரு புகழை கேரள மக்கள் இடத்தில் பெற்றவர் நடிகர் கலாபவன் அபி. 50 படங்களில் நடித்திருந்தாலும் பல விளம்பரங்களில் நடித்துள்ளார்.

சிறந்த மிமிக்ரி கலைஞரான இவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மலையாள விளம்பரங்களில் அவருக்கு ட்ப்பிங் குரல் கொடுத்தவராம்.

உடல் நல குறைவால் மருத்துவமனையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி நவம்பர் 30 ல் காலமானார். 52 வயதாகும் இவரின் மறைவு சினிமாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.