சுவிஸிலிருக்கும் ஆவா குழு தலைவரை கைது செய்து யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வருவோம்!

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளை நடத்தி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் ஆவா குழுவின் தலைவர் சன்னாவை (பிரசன்னா) இன்டர்போலின் உதவியுடன் கைது செய்து சுவிஸிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவருவோம் என யாழ்ப்பாண தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஹெமவிதாரன சூளுரைத்தார்.

aava-3யாழ்ப்பாணத்தில் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 பேரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் மீட்கப்பட்ட வாள்களை ஊடகங்களுக்கு நேற்றுக் காண்பிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது…..

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளை அரங்கேற்றி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் ஆவா குழு செயற்பட்டு வருகிறது.

தம்மை தாதா பாணியில் காண்பிப்பபதே அந்த இளைஞர் குழுவின் நோக்கமாகும்.

இவர்களை வழிநடத்தும் தலைவர் சன்னா என அழைக்கப்படும் பிரசன்னா சுவிஸ் நாட்டுக்கு சென்று தப்பித்து வாழ்ந்து வருகிறார். அவர் தொடர்பான முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.

அவரின் செயற்பாடுகள் தொடர்பில் கண்காணித்து வருகின்றோம். நீதிமன்றின் ஆணையைப் பெற்று சர்வதேசப் பொலிஸான இன்ரப்போலின் உதவியுடன் சன்னாவைக் கைது செய்து சுவிஸிலிருந்து அழைத்துவருவோம் என்றார்.