ப்ளீஸ் கம்பியால அடிக்காதீங்க.. அகதிகளின் கண்ணீர்!

மனுஸ் தீவு முகாமில் இருக்கும் அகதிகள் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

கினியாவிலுள்ள மனுஸ்தீவு கடற்படைத்தளத்தில் செயல்பட்டு வந்த அகதிகள் முகாம், கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் அதிகாரப்பூர்வாக மூடப்பட்டது.

திடீரென்று அகதிகள் முகாம் மூடப்பட்டதால், அவர்கள் அனைவரும் மாற்றும் முகாம்களுக்கு செல்லும் படி அறிவுறுத்தப்பட்டது.

file-20171030-30860-1v8wxjcஆனால் 100-க்கும் மேற்பட்ட அகதிகள், குறித்த முகாம் பாதுகாப்பு குறைவானது என்று கூறி அங்கிருந்து வெளியேற மறுத்துள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பொலிசார், அவர்களை முகாமில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதற்காக இரும்பு கம்பிகளை வைத்து தாக்கி வெளியேற்றியுள்ளனர். ஆனால் அவர்கள் தயவு செய்து எங்களை தாக்க வேண்டாம், வலிக்கிறது என்று கூறி கண்ணீர் வடித்துள்ளனர்.

இருப்பினும் அவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். வெளியேற்றப்பட்ட அகதிகள் Lorengau என்ற பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய முகாமிற்கு தங்க வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஆனால் அங்கு இடமின்றி பல அகதிகள் கடற்கரையிலேயே வைக்கப்பட்டுள்ளதாகவும், மாற்று முகாம் அமைந்திருக்கும் பகுதி உள்ளூர் வாசிகளால் தாக்கப்படும் ஆபத்து இருப்பதாகவும், அகதிகள் முன்னரே குற்றச்சாட்டுகளை எழுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.