கமல்ஹாசன் சமீபத்தில் அவரது ட்விட்டர் புரொபைல் படத்தை மாற்றியுள்ளார். அந்தப் படத்தில் கமல் மீசையை முறுக்கி கொண்டு, பார்க்கும் பார்வையில் ரௌத்திரம் ஏற்றிக்கொண்டு, பாரதியார் தோற்றத்தில் இருப்பார். அந்தப் படம் இணையத்தில் பயங்கர வைரலானது.
சென்னை மழையின் மீள்நினைவுகள் – அத்தியாயம்-1 சென்னையை முடக்கிய நவம்பர் 23 இரவு!
பெருமழை பெய்து இரண்டு ஆண்டுகள் ஆன பிறகும், அது ஏற்படுத்திச் சென்ற தாக்கம், நினைவுகள் என்றும் அழியாதவை. பெரும் மழையின் நினைவுகளை மீட்கும் தொடர் இது Heavy rain day ( november 23 ) gives an unforgettable traffic jam
இந்தநிலையில், தற்போது கமல் படத்துக்குப் பதிலாக கவுண்டமணி படத்தை அதே கலர் அதே கெட்அப்பில் மார்பிங் செய்து உடனடியாக உலவ விட்டு விட்டார்கள் நெட்டீஸன்கள். கமலின் அசல் புரொஃபைல் படம் எந்த அளவுக்கு வரவேற்பைப் பெற்றதோ, அதற்கு கொஞ்சமும் குறையாத அளவு இந்தப் படமும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பல நெட்டிஸன்கள் இந்தப் படத்தை தங்களது புரோஃபைல் போட்டோவாக உடனடியாக மாற்றிக்கொண்டுவிட்டார்கள். சமுக, அரசியல் நடவடிக்கைகளை உடனுக்குடன் பகடி செய்யும் நபர்களின் மனம் கவர்ந்த படமாக இந்த கவுண்டமணி படம் மாறிவிட்டது. கமலின் ஒவ்வொரு ட்விட்டும் ஏதொவொரு அதிர்வலையை உருவாக்கிக்கொண்டுதான் இருக்கிறது.