வான்­கோ­ழிக்கு விடு­தலை அளித்த டொனால்ட் ட்ரம்ப் !

வரு­டாந்த நன்றி செலுத்தும் தினத்தை முன்னிட்டு, தனக்கு வழங்­கப்­பட்ட ட்ரம்ப்ஸ்ரிக் என அழைக்­கப்­படும் வான்­கோ­ழியை உண­வுக்­காக கொல்­லாது அமெ­ரிக்க ஜனா­தி­பதி  விடு­தலை செய்­துள்ளார்.

வான்­கோ­ழிக்கு   விடு­தலை    அளித்த    டொனால்ட்   ட்ரம்ப்  !

நவம்பர் மாதத்தின் நான்காம் வியா­ழக்­கி­ழ­மை­யன்று ஒரு குடும்ப விழா­வாக கொண்­டா­டப்­படும் நன்றி செலுத்தும் தினத்தில், வான்­கோ­ழியைப் பயன்­ப­டுத்தி பல்­வேறு வகை உண­வு­களை சமைத்து பரி­மா­று­வது வழக்­க­மாகும்.

இம்முறையும், வரு­டாந்த நன்றி செலுத்தும் தினத்தை வழக்கமாக கொண்டாடிக்கொண்டிருக்கும் போது, தனக்கு வழங்­கப்­பட்ட ட்ரம்ப்ஸ்ரிக் என அழைக்­கப்­படும் வான்­கோ­ழியை உண­வுக்­காக கொல்­லாது அமெ­ரிக்க ஜனா­தி­பதி  விடு­தலை செய்­துள்ளார்

70 வரு­டங்­க­ளுக்கு முன்னர் அமெ­ரிக்­காவின் 33 ஆவது ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்த ஹரி எஸ். ட்ரூமன் காலத்தில், நன்றி செலுத்தும் தினம் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டது.

ட்ரூமன் வான்­கோ­ழியை உண­வாகப் பயன்­ப­டுத்­தி­யி­ருந்­த­தா­கவும், ஆனால் தான், மிகவும் இனி­மை­யான ஜனா­தி­ப­தி­யாக செயற்பட்டு அதற்கு விடுதலை அளித்துள்ளதாகவும்  டொனால்ட் ட்ரம்ப்  கூறியுள்ளார்.

அவ­ருக்கு முன்னர் அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்த பராக் ஒபாமா தனக்கு மேற்­படி தினங்களின் போது வழங்­கப்­பட்ட வான்­கோ­ழியை மன்­னித்து விடு­தலை செய்­வதை வழக்­க­மாக கொண்­டி­ருந்தார்.

பராக் ஒபாமாவால் மன்னிப்பளிக்கப்பட்டு உயிருடன் உள்ள டாட்டர் மற்றும் ரிக் ஆகிய வான்கோழிகளை தான் கொல்ல விரும்பிய போதும் விடுவிக்கப்பட்ட அந்த வான்கோழிகளை, எந்த சூழ்நிலையிலும் கொல்ல முடியாது என தனது சட்டத் தரணிகள் தன்னைத் தடுத்து விட்டதாக ட்ரம்ப் மேலும் தெரிவித்தார்.

‘வெள்ளை மாளிகைக்கு உலகத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் சில  பறவைகளும் விஜயம் செய்துள்ளன. அந்த வகையில் இன்று ட்ரம்ப்ஸ்ரிக் வந்துள்ளது’ என ட்ரம்ப் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.