சிவகங்கையில் பிஜேபியின் மூன்று மாவட்ட பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, ‘மத்திய அரசு ஜி.எஸ்.டி வரியை 200 பொருள்களுக்கு மேல் குறைத்துள்ளது. அந்த குறைப்பில், அத்தனை பலன்களும் மக்களை சென்றடைய வேண்டும். உணவு விடுதிகள் மற்றும் விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் அரசிற்கு ஒத்துழைப்பு தந்து, வரி விதிப்பு குறைப்பிற்கேற்ப, விலையை குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் தமிழக அரசு ஸ்தம்பித்துள்ளது.
வருமான வரித்துறையின் சோதனையில் மத்திய அரசிற்கோ அல்லது பி.ஜே.பிக்கோ எந்தச் சம்பந்தமும் இல்லை. கமல் போன்றவர்கள் பொது வாழ்விற்கு வந்தால், மதப் பிரச்சனையால் தமிழக மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். விவசாயிகளுக்கான காப்பீட்டுத் தொகை 1,870 கோடி ரூபாயை மத்திய அரசு,தமிழக அரசிற்கு முழுமையாக வழங்கிவிட்டது. கந்துவட்டி சட்டத்தை மீறுபவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். GST வரியினால் மாநிலங்களின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதாக கூறுபவர்கள் தற்குறிகள். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின், சசிகலா முதலமைச்சர் ஆக வேண்டும் என்று கூறி அ.தி.மு.கவில் முதன் முதலில் பிளவை ஏற்படுத்தியவர் தம்பிதுரை.
தம்பிதுரை இருப்பது எடப்பாடி பழனிச்சாமி அணி என்றாலும், இதயம் தினகரனுடன் இருப்பதுபோல் தெரிகிறது. சசிகலா குடும்பத்திற்கு எதிராக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையால் தம்பிதுரை மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசுகிறார். பத்மாவதியை ராஜஸ்தான் மக்கள் தெய்வமாக வழிபடுகின்றனர். காரணம் முஸ்லிம் படையெடுப்புகள் அங்குள்ள பெண்களின் கற்ப்புகளை சூறையாடினார்கள். எதிரிகளை எதிர்த்து போராடிய ராணிபத்மாவதி ஒரு கட்டத்தில் தன் கற்பை சூறையாடிவிடக்கூடாது என்பதற்காகவே தீ குளித்து தன்னை மாய்த்துக்கொண்டார்.
இப்படிபட்ட சரித்திர நிகழ்வுகளை, கேலி கூத்தாக்கியிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. அதனால் தான் பத்மாவதி படத்திற்கு, நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.கமலஹாசன் தத்தாரி தனமாக பேசுவது என்று முடிவெடுத்து பேசி வருகிறார். கமலும், ஈ.வே.ராவும் ஒன்று.இவர்கள் இந்துதுவாவிற்கு எதிராக பேசுபவர்கள். கருத்துரிமை என்ற பெயரில் சினிமாவில், கொச்சையாக, கீழ்தரமாக படம் எடுப்பதை அனுமதிக்க முடியாது.
கவர்னரின் பிரதான பணியே அதிகாரிகளுடன் கலந்தாலோசிப்பதும் ஆலோசனை நடத்துவதும் தான். இதனை ஆளுனர் தெளிவாக கூறியுள்ளார். ஆளுனர், மாவட்டங்களில் ஆய்வு நடத்துவதால் அந்தந்த மாவட்டங்களின் தேவைகள் தெரிய வரும்.
எனது சிவகங்கை மாவட்டத்திற்கு, ஆளுனர் வருகையை மக்கள் சார்பாக வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
கடையாக சொல்ல நினைப்பது கமல் ஹாசன் இனி டுவிட்டர் முன்னேற்றக்கழகம் என பெயரை வைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும். 2019-ம் ஆண்டு இந்தியாவின் பிரதமர் மோடி தான். காங்கிரஸ் இனி இந்தியாவில் ஆட்சி அமைக்கமுடியாது’ என்கிறார்.






