ரஷியா – இந்தியா விமானப் பணியாளர்களுக்கு விசா இன்றி நுழைய அனுமதி

ரஷியா - இந்தியா விமானப் பணியாளர்களுக்கு விசா இன்றி நுழைய அனுமதி

மாஸ்கோ:

இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 1200 விமானங்கள் ரஷியாவுக்கு செல்கின்றன. இதேபோல், ரஷியாவில் இருந்து ஆண்டுதோறும் 1100 விமானங்கள் இந்தியாவுக்கு வருகின்றன. இவற்றில் பெரும்பாலான விமானங்கள் கோவா நகருக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி வருகின்றன.

இந்நிலையில், இரு நாடுகளில் இருந்தும் வந்துசேரும் அரசு அங்கீகாரம் பெற்ற விமான நிறுவனங்கள், தனியார், ஒப்பந்த விமானங்களை ஓட்டிவரும் விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் இரு நாடுகளுக்குள் விசா இன்றி நுழையவும், தங்கவும் அனுமதி அளிக்கும் ஒப்பந்தம் சமீபத்தில் கையொப்பமானது.

இந்த புதிய நடைமுறையின்படி, விமான நிலைய நுழைவு கட்டணம் மற்றும் விசா கட்டணத்துக்கான செலவினங்கள் ஏதுமின்றி இரு நாட்டு விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.