காங்கிரஸ் கட்சியின் உயர் முடிவுகளை எடுக்கக்கூடிய காரிய செயற்குழுக் கூட்டம் நாளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் திகதிக்கு ஒப்புதல் வழங்கவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது காங்கிரஸ் துணைத் தலைவராக இருக்கும் ராகுல்காந்தி அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.
இதேவேளை, தலைவருக்கான போட்டியில் அவர் ஒருவர் மட்டுமே வேட்பாளராக இருப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சித் தலைவர் தேர்தலுக்கு ஒப்புதல் பெறுவதற்காக இந்த கூட்டம் நடத்துவதற்கான அவசியம் இல்லை என தெரிவிக்கும் கட்சித் தலைவர்கள், சோனியா காந்தி கட்சி தலைவர் தேர்தலுக்கு கட்சியின் ஒப்புதலை பெறவேண்டும் என தீர்மானித்தமையாலேயே கூட்டம் நடத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.