கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா- இலங்கை மோதும் முதல் டெஸ்ட் போட்டி நடந்து கொண்டிருக்கிறது.
இப்போட்டியின் போது நபர் ஒருவர் இந்திய அணிக்காக தேநீர் கொடுக்கிறார், எப்போதுமே 11 பேர் கொண்ட அணியில் இடம்பிடிக்காத மற்ற வீரர்கள் தான் தேநீர் கொடுப்பார்கள்.
ஆனால் இந்த போட்டியின் போது இந்திய அணியிலேயே இல்லாத ஒருவர் தேநீர் கொடுக்கிறார், இலங்கை அணி துடுப்பெடுத்தாடும் போது 12வது வீரராகவும் இருந்தார்.
இவர் யாரென அலசி பார்த்த போது தான் உள்ளூர் போட்டிகளில் பெங்கால் அணிக்காக விளையாடும் பங்கஜ் ஷா என்பது தெரியவந்தது.
கோபால்பூரில் பிறந்த பங்கஜ்ஷா, அவரது மாநிலத்துக்காக இதுவரை 12 முதல்நிலை போட்டிகளில் விளையாடியுள்ளார்.
கடந்த 2015ம் ரஞ்சி போட்டியில் அறிமுகமானவர், கடந்தாண்டு நவம்பர் மாதமே கடைசியாக விளையாடியுள்ளார்.
இதுவரை அவர் ஒரு சதம் மற்றும் ஆறு அரைசதம் அடிக்க 613 ஓட்டங்கள் அடித்து, தனது முதல் நிலை கிரிக்கெட் சராசரி 30.65 வைத்துள்ளார்.
கடந்த வருடம் பெங்கால் முதல் டிவிசன் தொடரில் மூன்று நாள் கொண்ட போட்டியில் ஒரு கிளப் அணிக்காக 413 ஓட்டங்கள் எடுத்து புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது.






