சாய்பல்லவி நடித்திருக்கும் `கரு’ பட ட்ரெய்லர்..!

’மதராசப்பட்டினம்’, ’தெய்வத் திருமகள்’, ’தேவி’ மற்றும் பல படங்களை இயக்கிய ஏ.எல்.விஜய், தற்போது ’பிரேமம்’ படத்தில் மலர் டீச்சராக நடித்து பிரபலமான சாய்பல்லவியை வைத்து ’கரு’ என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் சாய் பல்லவியுடன் நாக ஷவுரியா, ஆர்.ஜே.பாலாஜி, நிழல்கள் ரவி, சந்தான பாரதி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விக்ரம் வேதா படத்தின் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷாவும் எடிட்டராக ஆண்டனியும் பணியாற்றியுள்ளனர். ‘கரு’ படத்தின் ட்ரெய்லர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.