ரஷ்யாவில் 12 வயது சிறுமியை கடத்திச் சென்ற கும்பலொன்று இணையதள நேரலையில் 9 மணி நேரம் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் Ekaterinburg பகுதியில் குறித்த கொடூரம் சம்பவம் அரங்கேறியுள்ளது. இசை பாடம் முடித்து தனியாக குடியிருப்புக்கு திரும்பிய சிறுமியை 2 பேர் வலுக்கட்டாயமாக கடத்தி சென்றுள்ளனர்.
பின்னர் குடியிருப்பு ஒன்றில் கொண்டு சென்று சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு காணொளியாக பதிவு செய்துள்ளனர்.
பின்னர் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து விளம்பரப்படுத்தும் இணையதளம் ஒன்றில் சிறுமியை நேரலையாகவும் அந்த கும்பலானது பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுத்தியுள்ளது.
தொடர்ந்து 9 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த கொடூர தக்குதலுக்கு பின்னர் சுய நினைவை இழந்த சிறுமியை ஒரு பையில் திணித்து புறநகர் பகுதியின் சாலை ஓரத்தில் வீசிவிட்டு அந்த கும்பல் தப்பியுள்ளது.

இதனிடையே பல மணி நேரத்திற்கு பின்னர் நினைவு திரும்பிய சிறுமி அந்த பைக்குள் இருந்து பெரும்பாடு பட்டு அதிகாலை 3 மணி அளவில் வெளியே வந்துள்ளார்.
பின்னர் அந்த சாலையில் சென்ற வாகன ஓட்டியை உதவிக்கு அழைத்த அவர், பொலிசாருக்கும் தகவல் அளித்துள்ளார்.
இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமி மீது கொடூர தாக்குதலை நடத்திய நபர்களில் ஒருவர் 50 வயது நபர் என தெரிய வந்தது.

தொடர்ந்து 200-கும் அதிகமான பொலிசார் அப்பகுதி முழுவதும் தேடுதல் வேட்டையில் இறங்கினர். விசாரணை குழுவில் 50 அதிகாரிகளையும் மாநகர பொலிசார் களமிறக்கியுள்ளனர்.
மட்டுமின்றி இந்த பாலியல் தாக்குதல் தொடர்பாக தகவல் தெரிய வரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12 வயது சிறுமி தொடர்ந்து 9 மணி நேரம் பாலியல் பலாத்காரத்துக்கு உடுபடுத்திய நிலையில் உயிர் பிழைத்துள்ளது மிகவும் வியப்பான செயல் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.






