அதிகாரிகள் கைப்பற்றிய ஆதாரம், நேற்று நள்ளிரவு 2 மணிக்கு நடந்தது..!!

சசிகலா குடும்பத்தினர் வசம் இருக்கும் ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் உள்ளிட்ட 187 இடங்களில் நேற்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வந்தனர்..

நேற்று அவர்கள் ரெய்டு நடத்த போவதாக கூறிய இடங்கள் பின்வருமாறு,

– இளவரசியின் மகள் கிருஷ்னபிரியாவின் வீட்டில்

-ஜெயா டி.வியை நிர்வாகிக்கும் விவேக்கின் வீட்டில்,

-மன்னார் குடியில் உள்ள சசிகலாவின் உறவினர்கள் வீட்டிலும் ரெய்டு நடக்கிறது

ஜாஸ் சினிமாஸ்ஸின் ஆபிஸ்,புகழேந்தி , டி.டி.வி தினகரன் , திவாகரன் போன்றோர்களின் இல்லத்திலும் கோடநாடு எஸ்டேட், மறைந்த மகாதேவன் வீட்டில்,மேலும், தஞ்சை டாக்டர் வெங்கடேஷ் இல்லம் என 160 இடங்களில் தொடர்ச்சியாக வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டில் ஈடுபட உள்ளதாக கூறி இருந்தனர்..

சுமார் 1800 அதிகாரிகள் மொத்தமாக இந்த சோதனைகளில் களம் இறங்கி இருந்தனர்

ஜெயலலிதாவின் ஹெல்பர் பூங்குன்றன் வீடு, கோடநாடு எஸ்டேட் பங்களா என தொடரும் இந்த சோதனைகள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள டி.டி.வி தினகரனின் முக்கிய ஆதரவாளர்கள் வீட்டிலும் ரெய்டு போனது… இந்த ரெய்டுகளில் முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக அதிகாரிகள் கூறி இருந்தனர்..

நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற ரெய்டை முடித்துக் கொண்ட வருமான வரித்துறையினர் எஸ்டேட்டுக்கு சீல் வைத்து அடைத்தனர். ஆனால் இன்றும் அங்கு ரெய்டு நடக்கும் என்றும் சில சந்தேகங்கள் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இப்படி இருக்க சென்னை மகாலிங்கபுரத்தில் ஜெயா டி.வியின் தற்போதைய பொறுப்பளார் விவேக் வீட்டில் சோதனை நடைபெற்றபோது காவல்துறை அதிகாரிகளுக்கும், விவேக் ஆதரவாளர்களிடைய தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் ரெய்டு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் நள்ளிரவு 2 மணிக்கு ஆரம்பித்தனர்..

ஜெயா டி.வி ஆபிசில் விடிய விடிய சோதனை நடைபெற்றது. தொடர்ந்து அங்கு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.