அந்தமான் அருகே காற்றழுத்தத் தாழ்வு மையம்; சுழற்றி அடிக்கும் வானிலை மைய தகவல்..?

அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள புதியக் காற்றழுத்தத் தாழ்வு மையம் அடுத்த 48 மணி நேரத்தில் சற்று வலுப் பெறக் கூடும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.

புதிய காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் மிக கனமழை பெய்யவும் அதிக வாய்ப்பு உள்ளது.

இலங்கை அருகே திங்கள்கிழமை தென்மேற்கு வங்கக் கடலில் நிலைபெற்றிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவிழந்துவிட்டது.

ஆனால் தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதைச் சுற்றியுள்ள தெற்கு கேரளப் பகுதியின் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதை நோக்கி ஈரப்பதம் மிகுந்த காற்று கிழக்கில் இருந்து தமிழகம் வழியாகச் செல்கிறது.

இதன் காரணமாக தென் மாவட்டங்களில் மழை பெய்யகூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் இருக்கும். விட்டு, விட்டு மழை பெய்யும். சில சமயங்களில் கனமழை பெய்யவும் அதிக வாய்ப்பு உள்ளதாக அவர் கூறினார்

புதிய காற்றழுத்தம் இன்றைய தினத்துக்குப் பிறகு மேலும் வலுவடையும் போது தமிழக கடலோர மாவட்டங்களில் மீண்டும் அதிக மழை பெய்யும்.

அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள புதியக் காற்றழுத்தத் தாழ்வு மையம் அடுத்த 48 மணி நேரத்தில் சற்று வலுப் பெறக் கூடும். அதன் ராடார் புகைப்படங்கள் புயலின் நகர்வை போல தோற்றமளிக்கின்றன.