பப்புவா நியூ கினியா தீவில் இன்று காலை 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பப்புவா நியூ கினியா தீவில் இன்று காலை 7:26 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் விவா நகருக்கு தெற்கே சுமார் 83 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலுக்கு அடியில் 112 கிலோ மீட்டர் ஆழத்திலும் சுமார் 6.6 ரிக்டர் அளவுகோலாக பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் கடந்த 1998-ம் ஆண்டு கடலுக்கு அடியில் அடுத்தடுத்து உண்டான 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக மூன்று முறை சுனாமி ஏற்பட்டுஇ சுமார் 2இ100 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.