மஹிந்தவின் மங்கிப்போன சிந்தனையும் மத்தள விமான நிலையமும்! தினமும் செத்து மடியும் அப்பாவி உயிர்கள்!!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மஹிந்த சிந்தனை என்ற திட்டத்தின் மூலம் பல்வேறுபட்ட அபிவிருத்திகளை மேம்படுத்தியிருந்தார்.

அவரது திட்டத்தில் ஒன்றாக மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் ஒன்று. இது இலங்கையின் இரண்டாவது பன்னாட்டு வானூர்த்தி நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜபக்ச குடும்பத்தின் நினைவாக இந்த விமான நிலையத்திற்கு இந்த பெயர் சூட்டப்பட்டது.இந்தநிலையில் மத்தளை விமான நிலையம் மூலம் சுற்றுச்சூழல் மிகவும் பாதிப்படைந்துள்ளது என்று ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த விமானங்களில் பறவைகள் மோதி உயிரிழக்கும் சம்பவங்கள் தினந்தோறும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டதுடன், செத்து மடியும் விலங்குகள் மற்றும் பறவைகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது கேள்விக்கும் உள்ளாகியுள்ளது.

இதேவேளை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விமானங்களில் பறவைகள், விலங்குகள் உயிரிழக்கிறன.இருப்பினும் உயிரினங்கள் பல இறப்பதால் நல்லாட்சி அரசு இந்த விமான நிலையம் தொடர்பில் கவனம் எடுக்க வேண்டுமென ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் மத்தள மஹிந்த ராஜபக்ச விமான நிலையம் எதிர்வரும் மார்ச் மாதமளவில் இந்திய நிறுவனத்துடன் இணைந்து இயக்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்தப் புகைப்படங்களை பார்வையிட்ட பலர், மஹிந்தவின் மங்கிபோன சிந்தனையும் மத்தள விமான நிலையமும் என்று பலர் தமது கருத்துக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.