சவூதியின் மற்றுமொரு இளவரசருக்கு நடந்த சோகம் – காணொளி

சவூதியின் மூத்த இளவரசர் ஒருவர் உலங்குவானூர்தி விபத்தொன்றில் உயிரிழந்துள்ளதுடன் அவருடன் பயணித்த 7 அதிகாரிகளும் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த இளவரசர் , முன்னாள் முடிக்குரிய இளவரசர் மிக்ரின் பின் அப்துல் அசிஸின் மகன்  இளவரசர் மன்சூர் பின் மிக்ரின் என செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2015 ஆம் ஆண்டில் முடிக்குரிய இளவரசராக பதவியேற்ற மிக்ரின் பின் அப்துல் அசிஸின், சில மாதங்களில் அவரது ஒன்றுவிட்ட சகோதரரான இளவரசர் சல்மானால் ஒதுக்கப்பட்டார்.

யேமன் எல்லைப்பகுதிக்கு அருகே இளவரசரான  மன்சூர் பின் மிக்ரின் பயணித்த உலங்குவானூர்தியானது தரையில் மோதி விபத்துக்குள்ளானதில் அவரும் அவருடன் பயணித்த 7 அதிகாரிகளும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

சவூதியின், அஸிர் மாகாணத்தின் துணை ஆளுநரான இளவரசர் மன்சூர் பின் மிக்ரின் பல அதிகாரிகளுடன் பயணம் செய்தபோது குறித்த உலங்குவானூர்தி விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்து இடம்பெற்றமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சவூதியில் ஊழல்தொடரபில் இளவரசர் மற்றும் பல அமைச்சர்கள் கைதுசெய்யப்பட்ட நிலையில், குறித்த விபத்து இடம்பெற்றமையானது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Capturexdgdxfgbஇதேவேளை, சவூதி அரசின் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையிலான ஊழல் எதிர்ப்பு ஆணையகத்தின் உத்தரவின் பேரில், 11 இளவரசர்கள், நான்கு அமைச்சர்கள் உட்பட பல முன்னாள் அமைச்சர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான செயற்பாடுகள் முன்னெப்போதும் இல்லாத நிலையில், முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மானின் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் முயற்சியாக நோக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.