வெள்ளம், வரட்சி காரணமாக அரையாண்டு பொருளாதார வளர்ச்சி 3.7 வீதமாக வீழ்ச்சி

வெள்ளம் மற்றும் வரட்சி கார­ண­மாக விவசா­யத்தில் ஏற்­பட்ட பின்­ன­டைவு மற்றும் கட்டடத் தொழிற்­று­றை­யிலும் வெளி­யகத் துறை­க­ளி­லும்­ ஏற்­பட்ட பெரும் தாக்கம் கார­ண­மாக 2017 ஆம் ஆண்டின் முத­லா­வது அரை­யாண்டுப் பகு­தியில் இலங்­கையின் வளர்ச்­சி­யா­னது 3.7 சத­வீ­த­மாக வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது என்று  உலக வங்கி அறி­வித்­துள்­ளது.

phil-economic-growthஅத்­துடன் குறிப்­பி­டத்­தக்க சவால்கள் காணப்­பட்­ட­போ­திலும் 2017இல் இலங்கை பரந்­த­ளவில் திருப்­தி­க­ர­மான பொரு­ளா­தார செயற்றி­றனைக் காண்­பிக்­கின்­ற­துடன் 2017 க்குள் பொரு­ளா­தார வளர்ச்­சி­யா­னது 4.6 சத­வீ­தத்தை அடைந்து நடுத்­தர காலத்­திற்­குள்ளாக 5 சத­வீ­தத்தை எட்டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது  என்றும்  உலக வங்கி சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

இலங்­கையின்  அரை­யாண்டு பொரு­ளா­தார நில­வரம்  குறித்து  உலக வங்கி  அண்­மையில் இடைக்­கால அறிக்கை ஒன்றை   வெளியிட்­டது.  கொழும்பில் நடை­பெற்ற இந்த நிகழ்வில் உலக வங்­கியின் இலங்கை மற்றும் மாலை­தீ­வு­க­ளுக்­கான வதி­வி­டப்­ப­ணிப்­பாளர் ஐடா ஸ்வராய்  மற்றும்  உலக வங்­கியின் இலங்கை மற்றும் மாலை­தீ­வு­க­ளுக்­கான சிரேஷ்ட வதி­விட பொரு­ளி­ய­லாளர்   ரல்ப் வன் டூர்ண்  ஆகியோர் பொரு­ளா­தாரம் குறித்த விளக்­கங்­களை அளித்­தனர்.  இதன்­போது  மேற்­கண்ட விட­யங்கள் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளன.

முதலில் இலங்கை பொரு­ளா­தாரம் குறித்த உலக வங்­கியின் நில­வர அறிக்­கையில்  உள்ள சாராம்­சங்­களை பார்ப்போம்.  பொரு­ளா­தார வளர்ச்­சியை நிலை­பே­றா­ன­தாக வைத்­தி­ருப்­ப­தற்கும்  தொழில்­களை உரு­வாக்­கு­வ­தற்கும்  வறு­மையைக் குறைப்­ப­தற்கும் இலங்கை மேலும் அதி­க­மான தனியார் முத­லீ­டு­களை நோக்­கியும்  வர்த்­தகம் செய்­யக்­கூ­டி­ய­தான துறை­வழி வளர்ச்சி மாதி­ரியை நோக்­கியும் நகர்­வது அவ­சி­ய­மாகும்.

அபி­வி­ருத்­திக்­கான அதி­க­மான வாய்ப்­புக்­களை திறந்­து­வி­டு­வ­துடன்  புதிய வளர்ச்சி மாதி­ரியை நோக்­கிய இலங்­கையின் மாற்­றத்­திற்கு சிறப்­பான இடர்­மு­கா­மைத்­து­வ­மா­னது ஒத்­து­ழைத்து வழி­கோலும் என்­ப­தற்­கா­ன­வ­லு­வான தர்க்­கத்­தை­இந்த அபி­வி­ருத்தி நில­வர அறிக்கை முன்­வைக்­கின்­றது.

குடும்­பங்கள், நிறு­வ­னங்கள், பொதுத்­துறை மற்றும் ஒட்­டு­மொத்த பொரு­ளா­தா­ரத்­திற்­கான வாய்ப்­புக்­களை அதி­கப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­கா­க­ இந்­த­ இ­டர்­களை நன்­றாக முகா­மைத்­துவம் செய்­வது அவ­சி­ய­மாகும்.

வெள்ளம் மற்றும் வரட்சி கார­ண­மாக விவ­சா­யத்தில் ஏற்­பட்ட பின்­ன­டைவு மற்றும் கட்­டடத் தொழிற்று­றை­யிலும் வெளி­யகத் துறை­க­ளி­லும்­ ஏற்­பட்ட பெரும் தாக்கம் கார­ண­மாக 2017 ஆம் ஆண்டின் முத­லா­வது அரை­யாண்டுப் பகு­தியில் இலங்­கையின் வளர்ச்­சி­யா­னது 3.7 சத­வீ­த­மாக வீழ்ச்­சி­ய­டைந்­தது.

மொத்த தேசிய உற்­பத்­தி­யுடன் பார்க்­கையில் (2016ல் 79.3 சத­வீதம்) ஒப்­பீட்­ட­ளவில் அதி­க­மான பொதுக்­கடன் காணப்­ப­டு­கின்­றமை  அர­சுக்கு  சொந்­த­மான நிறு­வ­னங்கள் மற்றும் அரச முக­வ­ர­மைப்­புக்­க­ளிற்கு வழங்­கப்­ப­டு­கின்ற திறை­சேரி உத்­த­ர­வா­தங்கள் (2016இல் மொத்த தேசிய உற்­பத்­தியில் 7.1 சத­வீதம்) ஆகி­யவற்­றினால் நிதி  அபா­யங்­க­ளா­னது 2017 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்­க­ளிலும் தொடர்ந்தும் உயர்­வா­ன­தா­கவே  காணப்­பட்­டது.

குறிப்­பி­டத்­தக்க சவால்கள் காணப்­பட்­ட­போ­திலும் 2017இல் இலங்கை பரந்­த­ளவில் திருப்­தி­க­ர­மான பொரு­ளா­தார செயற்றிறனைக் காண்­பிக்­கின்­ற­துடன் 2017க்குள் பொரு­ளா­தார வளர்ச்­சி­யா­னது 4.6சத­வீ­தத்தை அடைந்து நடுத்­தர காலத்­திற்­குள்­ளாக 5 சத­வீ­தத்தை எட்டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

2017 மே மாதத்தில் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­ட­மி­ருந்து ஜி.எஸ்.பிபிளஸ் வர்த்­தக வரிச்­ச­லு­கையை இலங்கை மீளப் பெற்­றுக்­கொண்டது. இதே­வேளை  இலங்கை அர­சாங்­க­மா­னது  பொரு­ளா­தார சீர்­தி­ருத்த நிகழ்ச்சி நிரல் தொடர்பில் அதன் அர்ப்­ப­ணிப்பை வெளிப்­படுத்­தி­யுள்­ள­துடன்  கடந்த செப்­டம்பர் மாதத்தில் புதி­ய­தொரு உள்­நாட்டு வரு­மான சட்டத்தை  நிறை­வேற்­றி­ய­மை­யா­னது  முக்­கிய அம்­ச­மாக அமைந்­துள்­ளது என்று   நில­வர அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, உலக வங்­கியின் இலங்கை மற்றும் மாலை­தீ­வு­க­ளுக்­கான வதி­வி­டப்­ப­ணிப்­பாளர் ஐடா ஸ்வராய்  இலங்­கையின் பொரு­ளா­தாரம்  குறித்து குறிப்­பிட்­டுள்ளார்.

‘இலங்கை அதன் தூர­த­ரி­ச­னப்­பார்­வை­யாக இலட்­சி­ய­ வேட்­கை­யுடன் வெளி­யிட்­டுள்ள “நோக்கம்  2025” இல் கோடிட்டுக் காட்­டப்­பட்­டுள்ள மேல்  நடுத்­தர வரு­மான  நிலையை ஈட்டும் பய­ண­மா­னது நாட்டின் பொரு­ளா­தார போட்­டித்­தன்­மை­யிலும்  நாட்­டி­லுள்ள மிகவும் நலி­வ­டைந்த தரப்­பி­னரில் அதி­க­மா­ன­வர்­களை ஒதுக்­கி­வி­டாமல் இருப்­பதை    உறு­தி­செய்­து­கொண்டு ஏற்­று­ம­தியை தலை­மை­யாகக் கொண்­டுள்ள வளர்ச்சி மாதி­ரியை முன்­னெ­டுத்துச் செல்­கின்ற இய­லு­மை­யிலும் தங்­கி­யுள்­ளது என்று குறிப்­பிட்­டுள்ளார்.

இது இவ்­வாறு இருக்க ‘இந்த மாற்­ற­மா­னது அதற்­கு­ரித்­தான அபா­யங்­க­ளையும் வாய்ப்­புக்­க­ளையும் கொண்­டுள்­ளது. இது பல­பே­ரண்டப் பொரு­ளா­தார அபா­யங்கள் தொடர்பில் இலங்­கையை மேலும் நெகிழ்­வு­டை­ய­தா­க­மாற்றும். ஆனால் புதி­ய­வற்­றிற்கு ஆட்­ப­டுத்தும்.’ என உலக வங்­கியின் இலங்கை மற்றும் மாலை­தீ­வு­க­ளுக்­கான சிரேஷ்ட வதி­விட பொரு­ளி­ய­லா­ளாரும் இந்­த­அ­றிக்­கையின் படைப்­பா­ளர்­களில் ஒருவருமான ரல்ப் வன் டூர்ண் தெரிவித்தார்.

‘அடிக்கடி அதிகரித்துவருகின்ற இயற்கை அனர்த்தங்கள் மென்மேலும் தயாராகவிருக்க வேண்டியதன் அவசியத்தை கோரிநிற்கின்றது.  சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் இடர் அபாயங்களை நன்கு முகாமைத்துவம் செய்வது முக்கியமானதாகும்.  பேரண்ட நிதியத்தில் ஸ்திரத்தன் மையைப் பேணுதல் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் அதன் தயார்நிலைத்தன்மையை அதிகரித்துக் கொள்ளுதல் ஆகியவற்றின் மூலமாக இலங்கை அதன் இலக்கை அடைந்து கொள்ளமுடியும்.  என இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைதொடர்பில் உலக வங்கியின் அவதானிப்பைமேற்கொண்ட  வன்டூர்ண்  குறிப்பிட்டுள்ளார்.