சாதாரண பெண்ணாக இருந்த ஜூலி தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கு கொண்டு பல அரசியல் பிரமுகர்களை மோசமாக பேசி பிரபலமானார்.
மேலும் இவரை தனியார் தொலைக்காட்சி ஒன்று பிக் பாஸ் என்ற நிகழ்ச்சிக்கு பங்குகொள்ள அழைப்பு விடுத்தது.
13 பிரபலங்களுடன் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் ஜூலி, நிகழ்ச்சியை பார்த்த மக்களுக்கு இவரது குணம் பிடிக்கவில்லை. நிகழ்ச்சியில் பல பொய்களை கூறி மாட்டிக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஜூலி கலந்து கொண்டதன் மூலம் ஜல்லிக்கட்டு புகழ், வீர தமிழச்சி என்றெல்லாம் கூறி முதலில் ஆதரித்த அனைவரிடமும் கெட்ட பெயர் பெற்று பின்னர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.
இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு மக்களின் கடும் கோபத்திற்கு ஆளானார் ஜூலி. பல்வேறு வகையான எதிர்மறை விமர்சனங்களைச் சந்தித்தும் கூட சிறிதும் கலங்காமல் மீண்டும் அவர் மனதில் பட்டதையெல்லாம் செய்து வருகிறார்.
தற்போது ஜூலி பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடன இயக்குனர் கலா மாஸ்டர் நடுவராக இருக்கும் ஓடி விளையாடு பாப்பா என்கிற நிகழ்ச்சியில் தொகுப்பாளராகக் களமிறங்கியுள்ளார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் முதல் நாள் படப்பிடிப்பு கூட நடைபெற்றது.
இந்த நிலையில் இவருக்கும் பிரபல தொகுப்பாளருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாகவும், நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக எதுவும் வெளியாகவில்லை.