ட்விட்டரில் கமலை தெறிக்க விடும் நடிகை, மீடியா மட்டும் போதாது, மறைமுக அட்வைஸ்..

கொசஸ்தலை ஆற்றில் அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளை கொட்டப்படுவது குறித்து டுவிட்டரில் வார்னிங் செய்த கமல்ஹாசன், அதனை ஆராய்ந்து எண்ணூர் கடலோரப் பகுதிக்கு நேரடியாக சென்று களப்பணியைத் தொடங்கினார்.

அங்குள்ள மீனவர்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் குறைகளை செவிமடுத்து கேட்டு, தனது அக்கறையை வெளிப்படுத்தினார்.அது சமூகவலைதளத்தில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது..

தற்போது விவசாயிகள் பிரச்சினை குறித்து அக்கறையுடன் பேச ஆரம்பித்துள்ளார் கமல் ஹாசன்,

நடிகர் கமல்ஹாசன் அரசியல் களத்தில் இறங்குவது பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

மத்திய அரசையும், மாநில அரசையும் அவர் கடுமையாக சாடி வருகிறார். நீட் பிரச்சனை முதல் பல்வேறு பிரச்சனைகளுக்கு எதிராக தன் கருத்தை பதிவு செய்துவருகிறார்..பலர் இவரை ஆதரிக்கின்றனர், பலர் சாடுகின்றனர்..

கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்த கமல், என் நிறம் காவியல்ல என்ற கருத்தை முன் வைத்தார் என்பது குறிபிடத்தக்கது

இந்நிலையில் பாஜக ஆதரவாளர் காயத்ரி ரகுராம், கமல்ஹாசனை குத்திக்காட்டும் விதமாக சில டிவிட்களை சமீபகாலமாக அள்ளி விடுகிறார்..

அதில் அவர்,

நிஜ வாழ்க்கையில் நடிப்பதை விட்டுவிட்டு களப்பணி செய்ய தொடங்குங்கள். மத்திய அரசாங்கத்தை குறை சொல்லி அரசியலில் யாரும் நிலைக்க முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்..

மீடியாவின் உதவியால் மட்டும் அரசியலில் நீண்டகாலம் இருக்க முடியாது. களப்பணி செய்வது ரொம்ப முக்கியம் என்ற கருத்தை தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்த கமல் ஹாசன், கட்சி அறிவிப்பை வெளியிடும் முன்பாக களப்பணியில் இறங்கியது பல மூத்த கட்சிகளுக்கு பீதியை கிளப்பியுள்ளது..அதன் வெளிப்பாடாகவே இந்த ட்விட் உள்ளது.