பிரதமர் மோடியின் சென்னை வருகை தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழிசை அளித்துள்ள பேட்டியில்,
எதை வைத்து அரசியல் மாற்றம் நிகழும் என்பதை குறிப்பிடவில்லை. ஆனால் இந்த முறை அரசியல் மாற்றம் நிகழ்வது உறுதி என்று கூறி உள்ளதால், பல்வேறு விதமான சர்ச்சை விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் பரவி வருகிறது.

தினத்தந்தி’ நாளிதழின் பவளவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ள பிரதமர் மோடி இன்று காலை சென்னை வர உள்ளதால் விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பவள விழா சென்னை சேப்பாக்கம் காமராஜர் சாலையில் உள்ள சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா கலையரங்கத்தில் காலை 10.30 மணிக்கு வெகு விமரிசையாக நடைபெறுகிறது.


விழாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குவதுடன், பவள விழா மலரை வெளியிட்டு, விருதுகள் வழங்கி வாழ்த்தி பேசுகிறார். ‘தினத்தந்தி’ இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மேலும், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்றுகிறார்.

இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் வர உள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
விமான நிலையத்திலிருந்து சென்னை பல்கலைக்கழகம் வரை பிரதமர் வரும் பாதையில் போலீசார் தீவிர சோதனைகள் நடத்தி வருகின்றனர்.






