முடங்கியது வாட்ஸ்-அப், காரணம் இதுவா.?

இலங்கை உட்பட உலகம் முழுவதும் பல கோடி பேர் பயன்படுத்தி வரும் வாட்ஸ்-அப் செயலி பல நாடுகளில்  முடங்கிய நிலையில், விரைவாக மீட்கப்பட்டது.

வாட்ஸ்-அப் செயலி இணைப்பதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, பிலிப்பைன்ஸ், ஜெர்மனி, சௌதி அரேபியா, இத்தாலி ஆகிய நாடுகளில் வாட்ஸ்-அப் முடங்கியுள்ளது.

சுமார் ஒரு மணி நேரம் வாட்ஸ்-அப் செயலி முடங்கியது குறித்து பிற சமூக தளங்களில் மக்கள் புகார் அளித்ததை அடுத்து இந்த தகவல் தெரியவந்தது.

குறித்த செயலி செயலிழந்த நிலையில், 60 சதவீத வாடிக்கையாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன.

உலகம் முழுவதும் சுமார் 100.2 கோடி மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்துகின்றனர். ஏராளமான நாடுகளில் இந்த சேவை தகவல் தொடர்பு மற்றும் வணிகத்தில் முக்கியப் பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

whatsapp