ஆஸ்திரேலிய குடியுரிமைச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவதற்கென, நாடாளுமன்றில் அரசு முன்வைத்த சட்டமுன்வடிவு தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாண்டின் இறுதிக்குள் இந்த சட்டமுன்வடிவை அரசு மீண்டும் நாடாளுமன்றில் கொண்டுவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறு அறிவித்தல் வரை குடிவரவுத் திணைக்களத்தில் தாக்கல் செய்யப்படும் குடியுரிமை விண்ணப்பங்கள் அனைத்தும் ஏற்கனவே இருக்கும் சட்டம் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே பரிசீலிக்கப்படவுள்ளன.







