முடிவுக்கு வருகின்றது போராட்டம்:பதுங்கிக்கொண்டது தமிழரசு!

உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகள் கோரிக்கைகள் தொடர்பினில் அடுத்த கட்ட நடவடிக்கைகளினை முன்னெடுக்க குழு ஒன்று இன்று பல்கலைக்கழக மாணவர்களது போராட்டத்தினில் இன்று எடுக்கப்பட்டுள்ள நிலையினில உண்ணாவிரதப்போராட்டம் நாளை முடிவுறுத்தப்படவுள்ளது.இன்று மதியம் வடகிழக்கினை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாணசபையினர் அழைக்கப்பட்டிருந்தனர்.


தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பினில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,அமைச்சர் சர்வேஸ்வரன் மற்றும் கே.சிவாஜிலிங்கமும் ஈபிடிபி சார்பினில் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சி தலைவருமான டக்ளஸ் தேவானந்தா,ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.

மாணவ பிரதிநிதிகளிற்கும் அரசியல் தலைவர்களிற்குமிடையே நடந்த பேச்சுக்களின் தொடர்ச்சியாகவும் அரசியல் கைதிகளது உடல்நிலையினை கருத்தில் கொண்டும் போராட்டம் நாளை சனிக்கிழமையுடன் முடிவுறுத்தப்படவுள்ளது.
அரசியல் கைதிகளது கோரிக்கைகளினை முன்னெடுப்பதற்கான குழு மற்றும் இலங்கை ஜனாதிபதியுடன் அரசியல் தலைவர்கள்,வடகிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,வடமாகாணசபை பிரதிநிதிகள் மீண்டும் பேச்சுக்களினை நடத்துவதென தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

?????????????

இதனிடையே நாளைய தினம் பல்கலைக்கழக மாணவ பிரதிநிதிகள் சகிதம், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பினில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,அமைச்சர் சர்வேஸ்வரன் மற்றும் கே.சிவாஜிலிங்கமும் ஈபிடிபி சார்பினில் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சி தலைவருமான டக்ளஸ் தேவானந்தா,ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் ஆகியோர் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று போராட்டத்தை முடித்துவைக்கவுள்ளனர்.

இதனிடையே இன்றை மாணவ ஒன்றிய பிரதிநிதிகளுடனான சந்திப்பினில் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கெடுக்காது மார்டின் வீதி காரியாலயத்தினில் பதுங்கிக்கொண்டதாக சொல்லப்படுகின்றது.