சென்னையில் தற்போது பெய்துவரும் கனமழை தொடர்ந்து 1 மணி நேரத்திற்கு நீடிக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்து உள்ளார்.
வானிலை முன்னறிவிப்புகளை தரும் சிலர் சிஎஃப்எஸ் என்று சொல்லப்படும் கிளைமேட் போர்காஸ்ட் சிஸ்டம் என்ற நீண்ட நாட்களுக்கான தரவுகள் அடிப்படையில் கணிப்புகளை வெளியிடுகின்றனர்.
அதன் அடிப்படையில் அடுத்த மாதம் மழை பெய்யும் என்ற கணிப்புகளைக் கூறுகின்றனர். ஆனால், அவை துல்லியமானது அல்ல. ஏனெனில் வானிலை என்பது அன்றாடம் உருமாறும் தன்மை கொண்ட நிகழ்வு.
வானிலை ஆய்வு மையமும் முன்னறிவிப்புகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் வழங்குகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது சென்னைக்கு மேல் மழை மேகங்கள் சூழ்ந்திருப்பதால் சில இடங்கள் இதுவரை இல்லாத வகையில் சில மணி நேரங்களிலேயே 100மிமீ மழையை பெறும் என்று தற்போது தகவல் வெளியிட்டுள்ளார்.
மேலும் அடுத்த ஒரு மணி நேரத்திற்கும் குறையாமல் பேய்மழை பொழிய இருப்பதால் எந்த வித தேவை இன்றி, மக்கள் வெளியே செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.