இலங்கையில் கள்ளுக்கு அதிரடித் தடை

திருத்தியமைக்கப்பட்டுள்ள மதுவரிக் கட்டளைச் சட்டத்தில் கித்துள் மரத்தை தவிர ஏனைய மரங்களில் இருந்து கள் இறக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2018 ஜனவரி முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள இவ் மதிவரிக் கட்டளைச் சட்டத்தின் மூலம் பனை, தென்னை ஆகிய மரங்களில் இருந்து இனி கள்ளு இறக்கமுடியாது.

5computers-copyதென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்க தடை செய்யப்பட்டது. மேற்படி தடை எதற்கு என இதுவரையில் தெளிவுபடுத்தவில்லை.

இதனால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் வடக்கில் கள் இறக்கும் தொழில் செய்வோர் 60 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்படவுள்ளனர்.

பனை, தென்னை அபிவிருத்தி சங்கங்கள் சமாசங்களுக்கு கூட தடை செய்யப்படுவது தொடர்பில் தெளிவுப்படுத்தலோ முன் அறிவிப்போ கொடுக்கப்படவில்லை.

கள் இறக்கும் தொழில் செய்து பலர் தமது வாழ்வாரத்தை பெற்றுக்கொள்கின்றனர். கித்துள் மரத்திற்கு இல்லாத தடை எதற்காக பனை தென்னைக்கு விதிக்கப்பட்டது…??????

dd