அதை ஏன்டா நீ கேக்குற..? ஹெல்மெட் போடாமல் அபராதம் விதித்த காவலருக்கு இளைஞர் சவுக்கடி கொடுக்கும் காட்சி..!

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு காவலர்கள் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்திருந்தார்.

மேலும் போலீஸார் அணியாமல் வாகனம் ஓட்டுவதுபோல,சமூக வலைத்தளத்தில் புகைப்படம் வெளியானால்,இதுகுறித்து விசாரித்து அந்த நபருக்கு தண்டனை அளிக்கப்படும் என்று அவர் பேட்டியளித்தார்.

அதனையடுத்து பல காவலர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்று உயர் அதிகாரிகளின் கண்ணில் சிக்கி அபராதம் விதிக்கப்பட்டது.

4 (1)இப்படியாவது திருந்துவார்கள் என்று பார்த்தால் தமிழகம் முழுவதும் அதே போன்ற செயல்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது.

நேற்று காலை ஈரோடு பெரியவலசு, மாணிக்கம் பாளையம் சாலையில் காவல் அதிகாரி ஒருவர் ஹெல்மட் அணியாமல் வருவோரிடம் கண்ணியமாக பணம் வசூலித்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை லாவகமாக வீடியோ காட்சியாக உருவாக்கி, அடுத்தடுத்து கேட்கும் கேள்விகளால் அந்த காவலரை நிலைகுலைய செய்துள்ளார்.