எல்லாம் முடிந்தது இன்றே இறுதி.. அதிமுகவின் அண்டசாராசரங்களும் இதில் அடக்கம்: டெல்லியிலிருந்து வெளியான தகவல்..?

நெடுங்காலமாக இழுப்பறி நிலையில் இருந்து வந்த இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த இறுதி கட்ட விசாரணை டில்லியில் இன்று தேர்தல் கமிஷனில் நடக்கிறது. ‘

ஆணித்தரமாக தங்களுக்கே உறுதியாக கிடைக்கும் என முதல்வர் பழனிசாமி தரப்பினர் காலரை தூக்கிக்கொண்டு டெல்லி பறந்துள்ளனர்.

ஜெயலலிதா மறைவுக்கு பின் பன்னீர் செல்வத்தின் தர்ம யுத்த போரால் சசிகலா அணி, பன்னீர் அணி என அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்டது.

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட இரு அணிகளின் சார்பிலும் சின்னம் கேட்கப்பட்டதால் யாருக்கு கொடுப்பது என்று தேர்தல் ஆணையதிற்கே குழப்பம் ஏற்பட்டது.

இரு தரப்பும் மீறி அடம் பிடித்ததால் ஒருத்தருக்கும் கிடையாது என்று, உடனே முடிவெடுக்க முடியாமல் கட்சியின் பெயரையும் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கியது.

வாயா பன்னீரே , வந்து கொஞ்சம் நம்ம பக்கம் நின்னீரே… என்று இழுத்து பிடித்து முதல்வர் பழனிசாமி, பன்னீர் அணிகள் இணைந்த பின், ‘இரட்டை இலை சின்னத்தை, தங்கள் அணிக்கு தர வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

புதிய பிரமாண பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. விடுவன நானு என்று இதற்குப் போட்டியாக தினகரன் அணியினரும் தங்களுக்கே சின்னம் ஒதுக்க வேண்டும் என மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இது தொடர்பான விசாரணை டில்லியில் உள்ள, தேர்தல் கமிஷனில் நடந்து வருகிறது. முதற்கட்ட விசாரணை அக்டோபர் 6ல் நடந்தது.

இரண்டாம் கட்ட விசாரணை அக்டோபர் 13லும், மூன்றாம் கட்ட விசாரணை அக்டோபர் 23லும் நடந்தது.

55 ser

தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி தலைமையில் நடந்த மூன்று கட்ட விசாரணையின் போதும் இரு தரப்பினரும் தங்கள் வாதத்தை முன் வைத்தனர். இதைத் தொடர்ந்து இறுதி கட்ட விசாரணை இன்று நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று மாலை 3:00 மணிக்கு விசாரணை துவங்க உள்ளது. இதில் பங்கேற்க அமைச்சர் சி.வி.சண்முகம், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, முன்னாள் எம்.பி., மனோஜ்பாண்டியன் ஆகியோர் நேற்று டில்லி புறப்பட்டு சென்றனர். தினகரன் தரப்பினரும் நேற்றிரவு டில்லி சென்றனர்.

அப்போது டெல்லி விமான நிலையத்தில் பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி,

இரட்டை இலை சின்னம் தொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் நாளை நடைபெறவுள்ளதே இறுதி விசாரணையாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக கூறி உள்ளார்.

மேலும், இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் கேட்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இரட்டை இலை சின்னம் எங்களுக்கே என்று உறுதியாகவும், ஜெயலலிதா இருந்தபோது இரண்டாம் கட்ட தலைவர்களாக இருந்தவர்கள் தற்போது அதிமுகவை தலைமையேற்று வழிநடத்தி வருகிறார்கள் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.